ஈரான் நாட்டில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 129 பேர் பலி - News View

Breaking

Post Top Ad

Monday, March 16, 2020

ஈரான் நாட்டில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 129 பேர் பலி

ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 129 பேர் பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 853 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 130-க்கும் நாடுகளில் பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், மத்திய கிழக்கு நாடான ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு நேற்று வரை 724 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், ஈரானில் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 129 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. 

இதன் மூலம் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 853 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 14 ஆயிரத்து 991 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad