இத்தாலியில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை! - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 25, 2020

இத்தாலியில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை!

அண்மைய நாட்களில் இத்தாலியில் கொவிட் 19 என்ற கொரோனா வைரஸ் தொற்றானது அதிகரித்ததையடுத்து, அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதன்படி இத்தாலியில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளை உன்னிப்பாக கண்காணிக்கவும் ஒருங்கிணைக்கவும் ரோம் நகரில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் மிலனில் உள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை வெளியுறவு அமைச்சம் எடுத்துள்ளது. 

ரோமில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் மிலனில் உள்ள இலங்கை தூதரகத்தின் கருத்துப் படி, தற்போது எந்த இலங்கையர்களும் வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அதேவளை 104,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இத்தாலியில் வசிக்கின்றனர். அவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் லோம்பார்டி பிராந்தியத்தில் உள்ளனர். இந்த பிராந்தியங்களில் உள்ள சுகாதார அதிகாரிகளுடன் குறித்த தூதரகங்கள் தற்போது தொடர்புகொண்டு இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது. 

இத்தாலிக்கு வருகை தரும் இலங்கையர்கள், குறிப்பாக, வடக்கு இத்தாலி விழிப்புடன் இருக்குமாறும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் ரோம், மிலனில் உள்ள இலங்கை தூதரகங்கள் கேட்டுக் கொண்டுள்ளது. 

அத்துடன் தூதரகங்களின் உதவியையும் பெற விசேட எண்களையும் இத்தாலியில் உள்ள இலங்கையர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த தொலைபேசி இலக்கம் தொடர்பான விபரம் பின்வருமாறு.

Embassy General Lines:
(0039)-06-884-0801, (0039)-06-885-4560

Sri Lanka Embassy in Rome:
Mr. Sisira Senavirathne , Charge d'Affaires, (0039)3499351745

Ms. Priya Nagarajah, Third Secretary, (0039) 3403581603

Ms. Nimali Jayamaha, Management Assistant, (0039) 3483027997

Consulate General Lines:
(0039)2495365530, (0039)245395621

Sri Lanka Consulate General in Milan:
Ms Sandamalee Dissanayake, Attaché (0039) 3888016268

Ms.Chathurika Roshani, Management Assistant (0039)3887249016

ஹொட்லைன் எண்கள்:
தூதரகம் பொது தொலைபேசி: (0039) -06-884-0801, (0039) -06-885-4560

இலங்கையில் உள்ள ரோம் தூதரகம்:
திரு. சிசிரா செனவிரத்ன - சார்ஜ் டி அஃபைர்ஸ், (0039) 3499351745

திருமதி பிரியா நாகராஜா - மூன்றாவது செயலாளர், (0039) 3403581603

திருமதி நிமாலி ஜெயமஹா - மேலாண்மை உதவியாளர், (0039) 3483027997

தூதரகம் 
(0039) 245395621

இலங்கை மிலன் தூதரகம் பொது:
சந்தமாலி திஸாநாயக்க - தூதரின் உடன் (0039) 3888016268

அலீனா ரோஷினி - முகாமைத்துவ உதவியாளர் (0039) 3887249016

No comments:

Post a Comment