இராணுவத் தளபதி மீதான பயணத் தடையை நீக்கும் வரை நான் அமெரிக்க தூதரகத்திடம் வீசா கோர மாட்டன் - மரிக்கார் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Monday, February 17, 2020

இராணுவத் தளபதி மீதான பயணத் தடையை நீக்கும் வரை நான் அமெரிக்க தூதரகத்திடம் வீசா கோர மாட்டன் - மரிக்கார் எம்.பி.

(ஆர்.விதுஷா) 

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது. இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, இலங்கை சுயாதீனமான ஜனநாயக நாடாகும். இந்த நாட்டின் விவகாரங்களில் ஏனைய நாடுகள் தலையிட முடியாது. இது சவேந்திர சில்வா மீது விதிக்கப்பட்ட தடையல்ல, மாறாக இலங்கையின் இராணுவத் தளபதி மீதான பயணத் தடையாகும். 

ஆகவே, கட்சி பேதமின்றி அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்புகின்றோம். சவேந்திர சில்வாவிற்கான பயணத் தடையை நீக்கும் வரையில் அமெரிக்க தூதரகத்தின் ஊடாக வீசாவை கோர வேண்டாம் என தேசப்பற்றுள்ள அனைவரிடத்திலும் கேட்டுக் கொள்கின்றேன். 

அத்துடன், அவருக்கு பயணத் தடை நீக்கப்படும் வரையில் நான் அமெரிக்க தூதரகத்திடம் வீசா கோர மாட்டன். தேசப்பற்றுள்ள எத்தனை பேரால் இவ்வாறு கூற முடியும் என கேட்கிறேன். மொட்டுக் கட்சியில் எத்தனை பேரால் இவ்வாறு கூற முடியும் என்றார்.

No comments:

Post a Comment