எஸ்.எம்.எம்.முர்ஷித்
நாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்கிழமை நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பபு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதிகளிலும் அரச திணைக்களங்கள் மற்றும் பொது அமைப்பிக்களினாலும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
இதன் அடிப்படையில் வாழைச்சேனை வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு வாழைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்றது.
வர்த்தக சங்கத் தலைவர் ஏ.ஐயூப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் மதப் பெரியார்கள், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.சோபா ஜெயரஞ்சித், வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.ஜெயசுந்தர, பொலிஸார், பிரதேச பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், வர்த்த சங்கத்தினர், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது வாழைச்சேனை வர்த்தக சங்கத்தினரால் பதினைந்து மாணர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment