மீராவோடை பதுரியா மாஞ்சோலை முச்சக்கர வண்டிகள் சாரதிகள் கூட்டுறவு சங்கம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வும் முச்சக்கர வண்டிகளின் பேரணியும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 4, 2020

மீராவோடை பதுரியா மாஞ்சோலை முச்சக்கர வண்டிகள் சாரதிகள் கூட்டுறவு சங்கம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வும் முச்சக்கர வண்டிகளின் பேரணியும்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

நாட்டின் 72வது சுதந்திரதினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வரையறுக்கப்பட்ட மீராவோடை பதுரியா மாஞ்சோலை முச்சக்கர வண்டிகள் சாரதிகள் கூட்டுறவு சங்கம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வும் முச்சக்கர வண்டிகளின் பேரணியும் இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்றது.

வரையறுக்கப்பட்ட மீராவோடை பதுரியா மாஞ்சோலை முச்சக்கர வண்டிகள் சாரதிகள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மௌலவி ஏ.ஏ.எம்.ஜமீல் தலைமையில் மீறாவோடை பொதுச்சந்தை முன்றலில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக வாழைச்சேனை நிதவான் நீதிமன்ற பதில் நீதிபதியும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஹபீப் றிபான், ஓட்டமாவடி பிரதேச சபையின் முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள், மதப் பெரியார்கள், பள்ளிவாயல் நிருவாகிகள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முச்சக்கர வண்டிகள் சாரதிகள் கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தவர்களின் முச்சக்கர வண்டி பேரணி மீறாவோடையில் இருந்து ஆரம்பமாகி ஓட்டமாவடி, காவத்தமுனை, வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை, மாவடிச்சேனை, செம்மண்ணோடை, மாஞ்சோலை பதுரியா நகர் ஊடாக மீண்டும் மீராவோடையை வந்தடைந்தது.

கல்குடா மீடியா போரம், மீறாவோடை வர்த்த சங்கம், யூத் ஸ்டார் விளையாட்டுக் கழகம், அல் அக்ரம் விளையாட்டுக் கழகம், அஸ் சபர் சமூக சேவைகள் ஒன்றியம் என்பன சுதந்திர தின நிகழ்வுக்கு அனுசரனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பத்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment