(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் இலங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு இன்று பள்ளிவாயல் வளாகத்தில் தலைவர் ஏ.எல்.அலியார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள், சர்வமதத் தலைவர்கள், புத்திஜீவிகள், பிரதேச மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுக்கு வருகை தந்த சர்வமதத் தலைவர்களுக்கு பள்ளிவாயல் நிர்வாகத்தினர் நினைவுப் பரிசில்களை வழங்கி வைத்தனர்.
No comments:
Post a Comment