இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 72வது சுதந்திர தின நிகழ்வுகளின் ஓர் அங்கமாக கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்திலும் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வுகள் பாடசாலையின் புதிய அதிபர் முஹம்மத் அஸாம் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக இலங்கையின் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மொஹமட் கலந்து சிறப்பித்தார்.
மேலும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மார்க்க அறிஞர்கள், பிரதேச கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள், பாடசாலை மற்றும் மத்ரஸா மாணவர்கள், நிட்டம்புவ பொலிஸ் அதிகாரி, பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் முயற்சியால் நிர்மாணிக்கப்பட்ட வாகன தரிப்பிடமும் திறந்து வைக்கப்பட்டதுடன், மரக்கன்றுகளும் நடப்பட்டன.
(கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்)
No comments:
Post a Comment