அல் அமான் மரதன் ஓட்டப்போட்டியில் பக்தாத் இல்லம் முதலாமிடம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 5, 2020

அல் அமான் மரதன் ஓட்டப்போட்டியில் பக்தாத் இல்லம் முதலாமிடம்

மினுவாங்கொடை - அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமான மரதன் ஓட்டப்போட்டி, வித்தியாலய வெளியரங்கில் (04) இடம்பெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வைத் தொடர்ந்து, மினுவாங்கொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரொஹான் மஹேஷ் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

சுமார் 4 கிலோ மீற்றர் தூரம் கொண்ட இப்போட்டியில், வித்தியாலய மாணவர்கள் 30 பேர் கலந்து கொண்டனர்.

இதில் பக்தாத் இல்லத்தைச் சேர்ந்த மாணவன் எம். அம்ஜத் (இல:01), முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். 

இரண்டாம் இடத்தை, இஸ்தான்பூல் இல்லத்தைச் சேர்ந்த மாணவன் எம். சதாம் (இல:13), மூன்றாம் இடத்தை எம். ஹசீப் (இல: 14) ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 

இல்ல விளையாட்டுப் போட்டியின் 6 ஆம் திகதி இடம்பெறும் இறுதி நாள் நிகழ்வில், வெற்றிபெற்றோருக்கான கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

ஐ.ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment