இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டும், தெமட்டகொடை - வை.எம்.எம்.ஏ. தேசிய பேரவையின் 70 ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டும், வை.எம்.எம்.ஏ. யின் தலைமையக அனுசரணையில், நாடளாவிய ரீதியில் தேசிய சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது, தேசியக் கொடி ஏற்றல், மரக்கன்றுகள் விநியோகிப்பு, மரக்கன்றுகள் நடல் மற்றும் தேசிய சமூக ஒற்றுமைக்கான சொற்பொழிவுகள் என்பனவும் இடம்பெற்றன.
பாடசாலைகளுக்குத் தேவையான மரக்கன்றுகள், குறித்த பாடசாலைகளிலும் பிரதேச செயலாளர் அலுவலகங்களிலும் வழங்கிவைக்கப்பட்டன.
தேசிய வை.எம்.எம்.ஏ. யின் அக்கரைப்பற்று, பதுளை, பரகஹகொட்டுவ, கண்டி, மடவளை, பாணந்துறை தொட்டவத்தை, எழுவிலை ஆகிய இடங்களில் இயங்கும் கிளைகளில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
சமயப் பெரியார்கள், பிரதிநிதிகள், அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நாட்டுப்பற்றுள்ளவர்கள் எனப்பலரும், இச்சிறப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
தேசிய உப தலைவரும், 70 ஆவது ஆண்டுப் பூர்த்தி நிகழ்வுக்கான செயற்திட்ட தவிசாளருமான சஹீத் எம். ரிஸ்மியின் வழிகாட்டலில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஐ.ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment