பாறுக் ஷிஹான்
பண்ணை பெண்கள் விவசாய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அன்னமலை (மாகாண இடை) விவசாய திணைக்களத்தின் அணுசரணையில் காளான் கஞ்சி வழங்கும் நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலக சிற்றுண்டி சாலையில் இடம்பெற்றது.
புதன்கிழமை (5) காலை குறித்த நிகழ்ச்சி திட்ட ஆரம்ப நிகழ்வினை அன்னமலை விவசாய விரிவாக்கல் (மாகாண இடை) நிலைய பொறுப்பதிகாரி எஸ்.சசிகரன் வருகை தந்து ஆரம்பித்து வைத்ததுடன் இலவசமாக காளான் கஞ்சி நாவிதன்வெளி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நாவிதன்வெளிப் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், உதவிப் பிரதேச செயலாளர் என்.நவனீதராஜா, கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர், நிருவாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன், விவசாய போதனாசிரியர் எம்.எஸ்.எம். ஜனித்கான், தொழிநுட்ப உதவியாளர் ரி.தனரேகா, ரேனுகா, உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment