மட்டக்களப்பு - ஏறாவூர்ப் பிரதேசத்தில் சுமார் ஏழு கோடி ரூபா நிதியில் 'கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையம்' என்ற பெயரில் நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலை பொதுமக்களது பயன்பாட்டிற்காக ஒப்படைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று மாலை (4) நடைபெற்றது.
சர்வதேச புற்றுநோயாளர் தினத்தையிட்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புற்றுநோய் வைத்திய நிபுணர் ஏ. இக்பால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரபல தொழிலதிபர் எஸ்.எல்.எம். பௌஸ், ஜாமியா நளீமிய்யா கலாசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஏ.சி.அகார் முஹமட், நீதிபதிகள், வைத்தியர்கள், கல்விமான்கள் மற்றும் சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ சமூக முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வைத்தியசாலை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டு திறக்கப்படாதிருந்த நிலையிலும் நாட்டின் சகல மாகாணங்களையும் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான புற்றுநோயாளர்கள் இங்கு பராமரிக்கப்பட்டனர்.
நோயாளர்கள் குடும்ப சகிதம் தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய வசதி வாய்ப்பு இங்கு உள்ளது. தெற்காசியாவிலுள்ள எந்த ஒரு நாட்டிலும் இவ்வாறான வைத்திய பராமரிப்பு நிலையம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மூவினங்களையும் சேர்ந்த நோயாளர்கள் தற்போது இங்கு பராமரிப்பில் உள்ளனர்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment