(எச்.எம்.எம்.பர்ஸான்)
வாழைச்சேனை - தியாவட்டவான் அறபா வித்தியாலத்தில் நேற்று (14) நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட இல்லத்திற்கான வெற்றிக் கிண்ணத்தை காலித் பின் வலீத் ஜும்மா பள்ளிவாயல் நிருவாகத்தின் நிதி அனுசரணையுடன் பாடசாலை அதிபர் ஏ.எல். இஸ்மாயில் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விழ் காலித் பின் வலீத் ஜும்மா பள்ளிவாயல் தலைவர் கே. பெளஸ்தீன், செயலாளர் எம்.ஐ.எம். றிஸ்வான் உபதலைவர் அபுல்ஹஸன் பொருளாளர் ஹலால்தீன் பள்ளிவாயல் பேஷ் இமாம் நஜிமுதீன் ஆகியோருடன் தியாவட்டவான் 210 C வட்டாரத்தின் பிரதேச சபை உறுப்பினர் ஆசிரியர் ஏ.ஜீ. அஸீஸுல் றஹீம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இவ் வெற்றிக் கேடயத்தை வழங்கிய ஜும்மா பள்ளிவாயல் நிருவாகத்தினருக்கு பாடசாலை நிருவாகத்தின் சார்பாக அதிபர் தமது நன்றியினை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment