தியாவட்டவான் ஏ.சீ.எம்.சீ.யூத் மற்றும் அர் ரஸ்ஸாத் கழக நிர்வாகத்தினால் வெற்றிக் கிண்ணம் அன்பளிப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, February 17, 2020

தியாவட்டவான் ஏ.சீ.எம்.சீ.யூத் மற்றும் அர் ரஸ்ஸாத் கழக நிர்வாகத்தினால் வெற்றிக் கிண்ணம் அன்பளிப்பு

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட தியாவட்டவான் அறபா வித்தியாலத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டிக்கு வெற்றிக் கிண்ணத்தை ACMC YOUTH மற்றும் AR/RASSATH SPORTS CLUB நிருவாகத்தின் நிதி அனுசரணையுடன் பாடசாலை அதிபர் ஏ.எல். இஸ்மாயில் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.

வெற்றிக் கிண்ணம் வழங்கி வைக்கும் இந்நிகழ்வில் கழக தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஏனைய அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

இவ் வெற்றிக் கிண்ணத்தை வழங்கிய இளைஞர் அமைப்புக்கும், விளையாட்டுக் கழக நிர்வாகத்தினர்களுக்கும் பாடசாலை நிருவாகத்தின் சார்பாக அதிபர் தமது நன்றியினை தெரிவித்தார்.
இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்துகொண்டு வெற்றிக் கிண்ணங்களையும், பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

இறுதிநாள் நிகழ்வில் அணிநடை கண்காட்சி, சிறார்களின் உடற்பயிற்சி கண்காட்சி, அஞ்சல் ஓட்டம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதில் ஹிறா (பச்சை) இல்லம் 1ஆம் இடத்தையும், அறபா (சிவப்பு) 2ஆம் இடத்தையும் சபா (நீலம்) 3ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

No comments:

Post a Comment

Post Bottom Ad