பயங்கரவாதத்தினை முறியடித்த இலங்கையின் அனுபவங்களை பகிர்ந்த கொள்ள துருக்கி எதிர்பார்ப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2020

பயங்கரவாதத்தினை முறியடித்த இலங்கையின் அனுபவங்களை பகிர்ந்த கொள்ள துருக்கி எதிர்பார்ப்பு

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடிய இலங்கையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், வன்முறை அடிப்படையிலான தீவிரவாதத்திற்கு எதிராக இணைந்து செயல்படும் வகையில் புலனாய்வு தகவல் பகிர்வை மேம்படுத்துவதற்கும் துருக்கி எதிர்பார்க்கிறது என இலங்கைக்கான துருக்கிய தூதுவர் ஆர். தெமித் சிகாஜியோலோ தெரிவித்தார். 

இலங்கைக்கான துருக்கிய தூதுவர் ஆர். தெமித் சிகாஜியோலோ மற்றும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று (17) காலை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதன்போதே இலங்கைக்கான துருக்கிய தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது துருக்கி தனது எல்லைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பயங்கரவாதத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான இலங்கையின் அனுபவங்கள் துருக்கிக்கு மிகவும் மதிப்பு வாய்ந்ததாக இருக்கும் எனவும் தெரிவித்த அவர் வன்முறை அடிப்படையிலான தீவிரவாதத்திற்கு எதிராக இணைந்து செயல்படும் வகையில் புலனாய்வு தகவல் பகிர்வை மேம்படுத்துவதற்கும் துருக்கி எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
'பயங்கரவாதத்தின் எந்தவொரு வடிவத்தையும் அல்லது மத அல்லது வகுப்புவாத தீவிரவாதத்தின் வெளிப்பாட்டையும் இலங்கை ஏற்றுக்கொள்ளாது. எமது தேசிய நலன்களைப் பாதுகாக்கவும், போராடிப் பெற்றுக்கொண்ட சமாதானத்தை பாதுகாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுப்போம் ”என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

துருக்கி ஒரு வலுவான இராணுவ சக்தியைக் கொண்டிருப்பதாகவும், இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் உலகளாவிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் நிபுணத்துவ அறிவு பரிமாற்றமானது, இரு நாடுகளுக்கும் சிறந்த வாய்ப்பாக அமையும் என மேஜர்ஜென் குணரத்ன தெரிவித்தார். 

இந்த நிகழ்வவினை நினைவுகூரும் வகையில் மேஜர் ஜெனரல் குணரத்ன மற்றும் ஆர். தெமித் சிகாஜியோலோ ஆகியோருக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

No comments:

Post a Comment