அரசாங்கம் அதிகாரம் இல்லாத நிலையில் அதிகாரங்களை கையில் எடுத்து செயற்படுகின்றார்கள் என்றால் பொதுத் தேர்தலின் பின்னர் எத்தகைய நிலைமைகள் உருவாகும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Friday, February 14, 2020

அரசாங்கம் அதிகாரம் இல்லாத நிலையில் அதிகாரங்களை கையில் எடுத்து செயற்படுகின்றார்கள் என்றால் பொதுத் தேர்தலின் பின்னர் எத்தகைய நிலைமைகள் உருவாகும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அதிகாரம் இல்லாத நிலையிலேயே அதிகாரங்களை கையில் எடுத்து செயற்படுகின்றார்கள் என்றால் பொதுத் தேர்தலின் பின்னர் எத்தகைய நிலைமைகள் உருவாகும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அ.பரஞ்சோதி தெரிவித்தார்.

நீர்வேலியிலுள்ள மாதர் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் கோப்பாய் தொகுதி மக்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற பின்னர் நாட்டு நிலைமைகள் மோசமான நிலையில் உள்ளது குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ் மக்கள் மீது பல்வேறு அடக்கு முறைகள் இடம்பெற்று வருகின்றது. ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அதிகாரம் இல்லாத நிலையிலேயே அதிகாரங்களைக் கையில் எடுத்து செயற்படுகின்றார்கள்.

பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அதை முழுமையாக செய்து முடிப்பதற்கு நிதி இல்லை என்ற ஒரு காரணம் கூறப்படுகின்றது. அது மட்டுமன்றி ஒரு சில வேலைத் திட்டங்கள் செய்வதற்கு அனுமதி கிடைத்தபோதும் அது ஒரு சில அரசியல் தலைமைகளினால் மாற்றம் செய்யப்படுகின்றது. 

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் கூட்டணியை உருவாக்குகின்றார்கள். இன்று தமிழ்த் தேசியத்துடன் செயற்பட்ட மூன்று அணியாகப் பிரிந்துள்ளார்கள். ஏன் இவ்வாறு பிரிந்துள்ளார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

பதவிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் இவ்வாறு பிரிபவர்கள் மக்களுக்கு எதனை செய்யப் போகின்றார்கள். மாகாண சபை இருந்தபோது அமைச்சுக்காக அடிபட்டவர்கள் பொது இடங்களில் சண்டித்தனம் காண்பித்தவர்கள் இன்று ஒன்றிணைந்துள்ளார்கள். 

இவர்களின் நோக்கம்தான் என்ன மக்களுடைய உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கின்றவர்களாக தமிழரசுக் கட்சி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பல கட்சிகள் இருக்கின்றமையினால் பல முரண்பாடுகள் கருத்து வேறுபாடுகள் இருக்கும் அவை பேசித் தீர்மானிக்கப்பட வேண்டியவை. இதனைவிடுத்து கட்சிகளுக்குள் இருந்து வெளியேறி புதிதாய் கட்சிகளை உருவாக்குவதும் கூட்டணியமைப்பதும் ஏற்றவிடையம் அல்ல. 

தற்போதுள்ள சூழலில் ஒன்றுபட்டு இருப்பதுதான் இன்றைய கட்டாய தேவை. தமிழ் மக்களை அழித்தவர்கள் இன்று ஆட்சியில் உள்ளார்கள். பாராளுமன்றத் தேர்தலிலும் தனித்து ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் தற்போதே இனவாதம் மதவாங்களை கக்கிக் கொண்டு தமக்கான ஆதரவை பெற்றுக் கொள்ள முயற்சி. 

அதற்கேற்றால் போல் இங்கும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற இருவர் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் எனக்கூறி மக்கள் சந்திப்புக்களை செய்வதும் மிரட்டுவதுமாக இருக்கின்றார்கள். 

இவ்விடையங்களை மக்கள் தெளிவாகப்புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் நெருங்குகின்றபோது பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவிப்பார்கள். பலவற்றை வழங்குவார்கள். இவ்விடையங்களில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment