பொதுத் தேர்தலை இலக்கு வைத்து அனைத்து தொகுதிகளையும் துரிதமாக தயார்ப்படுத்துங்கள் : ரணில் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 13, 2020

பொதுத் தேர்தலை இலக்கு வைத்து அனைத்து தொகுதிகளையும் துரிதமாக தயார்ப்படுத்துங்கள் : ரணில்

(எம்.மனோசித்ரா) 

பொதுத் தேர்தலை இலக்காக கொண்டு அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அமைப்புக்களை வலுப்படுத்துமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். 

சிறிகொத்தாவில் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தொகுதி அமைப்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். 

பொதுத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். 

கொழும்பு உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் ஒருங்கிணைப்பு கூட்டங்களை நடத்துவதை விட சமூக வலைத்தளங்களின் ஊடாக தொழிற்துறை சார்ந்தவர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. 

பொதுத் தேர்தலுக்காக கட்சியை தயார்படுத்துவதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், உள்ளுராட்சி உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் முன்னணி உள்ளிட்டோருடனும் எதிர்வரும் நாட்களில் சிறிகொத்தாவில் சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளன.

No comments:

Post a Comment