எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டாலும் மின்சார கட்டணங்களை அதிகரிக்க போவதில்லை என தெரிவித்த மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, தீடீர் மின் வெட்டுக்கு ஒரு போதும் இனி இடமளிக்க போவதில்லையென தெரிவித்தார்.
இந்திய சக்தி வளர்ச்சி மன்றத்தின் மூன்றாவது கூட்டம் இன்று கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றிருந்தது அதில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
புதுப்பிக்க கூடிய சக்தி மூலங்கள் மூலம் இலங்கைக்கு தேவையான மின்சாரத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக சூரிய சக்தி மூலத்தை பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
2030 ஆம் ஆண்டு பகுதியில் இலங்கை மொத்த மின்சாரத்தில் 70 வீதத்தினை புதுப்பிக்க கூடிய மின்சக்தி உற்பத்தி செய்ய முடியும். இந்த முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்தியா 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதையாகி வழங்கியுள்ளது. இதன் மூலம் அதிகளவான மின்சாரத்தினை தேசிய மின்னோட்டத்துடன் இணைக்க கூடியதாக இருக்கும்.
2023 ஆம் ஆண்டில் நஷ்டத்தில் இருக்கும் இலங்கை மின்சார சபையினை இலாபம் பெரும் ஒரு நிறுவனமாக மாற்ற முடியும். இதன் மூலம் திடீரென ஏற்படும் மின்வெட்டு ஒரு போதும் இடம்பெறாது என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment