கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணை இழுத்துச் செல்லும் காட்சியினால் பரபரப்பு ! - News View

About Us

About Us

Breaking

Thursday, February 13, 2020

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணை இழுத்துச் செல்லும் காட்சியினால் பரபரப்பு !

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் என சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவரை சீனாவில் உள்ள குழுவொன்று அவரை பலாத்காரமாக லொறியில் உள்ள உலோகப் பெட்டியில் ஏற்றிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. 

அத்தோடு மற்றுமொறு குடும்பத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அவர்களினால் இழுத்துச் செல்லப்படும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது. 

சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் தனிமைப்படுத்தப்படும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. 
அதேவேளை ஒரு பெண்ணை உலோகப் பெட்டியில் ஏற்றும் காட்சியில் அவர் கதறி அழுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 

இந்நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட அல்லது நோய்த் தொற்றுக்குள்ளான நபர்களிடம் நெருங்கி இருப்பவர்கள், காய்ச்சல் உள்ளவர்களை தனிமைப்படுத்தி வைக்குமாறு அந்நாட்டு துணை பிரதமர் அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு கொரோனா வைரஸினால் தற்போது வரை 1,369 பேர் உயிரிழந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 ஆயிரத்தையும் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment