இராணுவத் தளபதி மீதான அமெரிக்காவின் தடைக்கு மங்களவும், ரணிலுமே காரணம் - டி.யூ. குணசேகர - News View

About Us

About Us

Breaking

Monday, February 17, 2020

இராணுவத் தளபதி மீதான அமெரிக்காவின் தடைக்கு மங்களவும், ரணிலுமே காரணம் - டி.யூ. குணசேகர

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருக்கும் தடையானது எமது நாட்டின் கெளரவம் மற்றும் இறையாண்மைக்கு விடுக்கும் அச்சுறுத்தலாகும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார். 

அத்துடன் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடந்த அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர மற்றும் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஆகியோரே காரணமாகும். 

யுத்தக் குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்க தீர்மானித்தது. 

அதற்கான ஆவணத்தில் மங்கள சமரவீர கைச்சாத்திட்டிருந்தார். ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமையவே மங்கள சமரவீர இதனை மேற்கொண்டிருந்தார். 

அன்று மங்கள சமரவீர கைச்சாத்திட்டதன் பின்விளைவேயே தற்போதும் நாங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கின்றோம் என்றும் அவர் மேலும் கூறினார். 

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment