ஈராக்கின் ஜனாதிபதி பர்ஹாம் சாலிஹ் நாட்டின் புதிய பிரதமராக முகம்மது அல்லாவியை நியமித்துள்ளார்.
தொடர் போர்கள், நாட்டின் பொருளாதாரம் சீர் குலைவு, வேலையில்லாப் பிரச்சினை, ஊழல் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக ஈராக்கில் கடந்து நான்கு மாதங்களாக போராட்டக்கள் அரேங்கேறி வருகின்றன.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் அடெல் அப்துல் மஹ்தி நவம்பர் மாதம் பதவி விலகினார். எனினும் புதிய பிரதமரை தெரிவு செய்யும் வரை அவர் ஒரு பராமரிப்பாளர் பதவியிலிருந்தார். இதனையடுத்து சுமார் இரண்டு மாதங்களின் பின் புதிய பிரமர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை, ஈராக்கின் ஜனாதிபதி 66 வயதான முகம்மது அல்லாவியை பிரதமராக அறிவித்தார்.
இவர் ஊழலுக்கு எதிராக கிளர்ச்சியைத் தொடரும் படி போராட்டக்காரர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் நூற்றுக் கணக்கான எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டமைக்கு காரணமானவர்களை பொறுப்பேற்க வைப்பதாகவும், ஊழலை எதிர்த்துப் போராடுவதாகவும் உறுதியளித்துள்ளார்.
ஷியாவான திரு அல்லாவி, ஈராக்கில் அரசியலில் பிரவேசத்திற்கு முன்பு லெபனான் மற்றும் இங்கிலாந்தில் படித்து பணியாற்றியுள்ளார். அத்துடன் அவர் பாக்தாத்தில் இரண்டு முறை தகவல் தொடர்பாடல் அமைச்சராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment