எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 25, 2020

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் தனது 91 ஆவது வயதில் கெய்ரோவிலுள்ள வைத்தியசாலையில் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி முபாரக்கிற்கு ஜனவரி பிற்பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி முபாரக் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்ததாக அவரது மகன் அலா தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 850 பேரை, தனது பாதுகாப்பு படைகளை கொண்டு படுகொலை செய்த குற்றத்திற்காக, ஹொஸ்னி முபாரக் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் எழுச்சியின் பின்னர் கைது செய்யப்பட்டு அந்நாட்டு இராணுவ தடுப்பில் வைக்கப்பட்டார். 

மேலும் 80 வயதாகும் வரை ஹொஸ்னி முபாரக் சுமார் 30 வருட காலம் எகிப்தை ஆட்சி செய்துள்ளார். இந்நிலையில் அரபு வசந்த புரட்சியின் மூலம் அவரது ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதோடு, படுகொலைகள் மற்றும் ஊழல் குற்றத்திற்காக ஹொஸ்னி முபாரக் மற்றும் அவரது இரண்டு மகன்மார் ஆகியோர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்நிலையில் மகன்மார் இருவரும் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் விடுவிக்கப்படவே, கெய்ரோவிலுள்ள இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முபாரக், நோய்வாய்ப்பட்டநிலையில் மேன்முறையீடு செய்திருந்தார். 

குறித்த மனுவை விசாரித்து கெய்ரோ இராணுவ நீதிமன்றம் ஹொஸ்னி முபாரக்கின் உடல்நிலை என்பவற்றை கருத்திற்கொண்டு, அவரை 2017 ஆம் ஆண்டு விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment