எ.எம்.றிசாத்.
மன்னார் பேரூந்து சாலைக்கு சொந்தமான மன்னாரில் இருந்து முள்ளிக்குளம் செல்லும் பேரூந்தை மாற்றித்தருமாறு பிரதேச மக்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் பேரூந்து சாலைக்கு சொந்தமான (NB-2304) இலக்கமுடைய பேரூந்து முள்ளிக்குளத்தில் இருந்து அதிகாலை 6.30 மணிக்கு மன்னாரை நோக்கி புறப்படுகின்றது.
இந்த பேரூந்தில் பாடசாலை மாணவ மாணவிகள், கர்ப்பிணி தாய்மார்கள், மதகுருமார்கள், வயோதிபர்கள், சிறுவர்கள் என பலரும் பயணிக்கும் இந்த பேரூந்து மிகவும் சிதைவடைந்து அதன் இருக்கைகள் பயணிகள் அமர்வதற்கு உகந்ததாக இல்லை.
இந்த பேரூந்து மாற்றித்தருமாறு மன்னார் பேரூந்து சாலை பொறுப்பாளரிடம் பலமுறை தெரியப்படுத்தியும் அவர் இந்த விடயம் தொடர்பாக கவனமெடுக்காமல் உள்ளார்.
இந்த பேரூந்தை மாற்றி பயணத்திற்கு உகந்த பேரூந்தை சேவையில் ஈடுபடுத்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென முசலிப்பிரதேச மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.






No comments:
Post a Comment