பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
நாளை நள்ளிரவு (27) இவ்விலைக் குறைப்பு அமுலுக்கு வருவதாக சங்கம் முடிவு எடுத்துள்ளது.
அந்த வகையில் ஒரு இறாத்தல் பாணின் விலையை 05 ரூபாயால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று (25) இடம்பெறும் கூட்டத்தின் பின்னர், திருத்தப்பட்ட அனைத்து பேக்கரி உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் அறிவிக்கப்படுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரி நிவாரணத்தை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment