சைட்டம், நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை குறித்து ஆராய மூவரடங்கிய குழு நியமனம் - அமைச்சர் பந்துல - News View

About Us

About Us

Breaking

Thursday, February 13, 2020

சைட்டம், நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை குறித்து ஆராய மூவரடங்கிய குழு நியமனம் - அமைச்சர் பந்துல

(இராஜதுரை ஹஷான்) 

சர்ச்சைக்குரிய நெவில் பெர்னாண்டோ தனியார் வைத்தியசாலை மற்றும் சைட்டம் நிறுவனம் தொடர்பில் ஆராய ஓய்வு பெற்ற நீதியரசர்கள் மூவரை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

இக்குழுவின் விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்றதும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். சைட்டம் நிறுவனம் தொடர்பில் கடந்த அரசாங்கமும், சுகாதார அமைச்சும் முரண்பாடான தீர்மானங்களை மாத்திரமே முன்னெடுத்துள்ளார்கள். 

விசேட குழுவின் அறிக்கையின் பிரகாரம் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும். எவரது சொத்துக்களையும் உரிய காரணிகளின்றி அரசுடமையாக்குவது அரசாங்கத்தின் நோக்கமல்ல, எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு சுமுகமான முறையில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment