ஜனாதிபதியின் சுதந்திர தின உரை மிகவும் சிறப்பானது, அதை நடைமுறைப்படுத்துங்கள் - மங்கள - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 4, 2020

ஜனாதிபதியின் சுதந்திர தின உரை மிகவும் சிறப்பானது, அதை நடைமுறைப்படுத்துங்கள் - மங்கள

(நா.தனுஜா) 

72 ஆவது சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நிகழ்த்திய உரை மிகவும் சிறப்பானதாக இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, உரையில் குறிப்பிட்ட விடயங்களை ஜனாதிபதி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். 

அத்தோடு 1948 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பயணம் சிறந்த உரைகளை நிகழ்த்திய நன்நோக்கம் கொண்ட தலைவர்களைக் கொண்டிருக்கிறது. ஆனால் இது செயற்பட வேண்டிய தருணமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். 

இன்று சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற நாட்டின் 72 ஆவது சுதந்திர தின வைபவத்தில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, 'இலங்கையின் பிரஜைகள் அனைவருக்கும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது. அதேபோன்று அவர்களுக்கு இருக்கக் கூடிய சுதந்திரமாகச் சிந்தித்தல், தனிப்பட்ட அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பதற்கான சுதந்திரம், கருத்துச்சுதந்திரம் ஆகிய உரிமைகளை உறுதி செய்வதற்கு நாம் முனைப்புடன் செயலாற்றுவோம்' என்று உறுதியளித்ததுடன், மேலும் பல விடயங்கள் குறித்தும் பேசியிருந்தார். 

இந்நிலையில் ஜனாதிபதியின் உரை தொடர்பில் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர அவரது டுவிட்டர் பக்கத்திலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment