(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை ஆகஸ்ட் மாத் 17 ஆம் திகதி வரை நீடித்துக் கொள்ளும் தேவை இடைக்கால அரசாங்கத்திற்கு கிடையாது என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி ஒருபோதும் காலம்தாழ்த்தி செயற்படுத்தமாட்டார் என்றும் கூறினார்.
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ மாத்திரமே மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் பிரதானியாகவுள்ளார். இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவை உறுப்பினர்கள் எவரும் மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அல்ல.
அரசாங்கம் மக்களுக்கு முழுமையான அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாமைக்கு இதுவே பிரதான தடையாக காணப்படுகின்றது. இதற்கு பொதுத் தேர்தலின் ஊடாக மாத்திரமே தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment