பிணைமுறி மோசடிகள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தடயவியல் அறிக்கைகளுக்கு வழக்குத் தொடர முடியாது - அமைச்சர் வாசுதேவ - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 19, 2020

பிணைமுறி மோசடிகள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தடயவியல் அறிக்கைகளுக்கு வழக்குத் தொடர முடியாது - அமைச்சர் வாசுதேவ

பிணைமுறி மோசடிகள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தடயவியல் அறிக்கையில் அடங்கியுள்ள காரணிகளுக்கு எதிராக, வழக்குகள் தொடுக்க முடியாத சூழ்நிலை காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். 

சர்ச்கைக்குரிய பிணைமுறி சோடிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தடயவியல் அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், பிணைமுறி மோசடி தொடர்பில் போதியளவு சாட்சியங்களுடன் கடந்த அரசாங்கத்துக்கு அறிக்கைகள் கிடைக்கப் பெற்றிருந்த போதிலும் அவற்றுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்துடனிருந்த இவர்களால் இந்த மோசடிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது போனது. 

இது குறித்து கிடைக்கப் பெற்ற அறிக்கைகளும் விவாதிக்கப்படவும் இல்லை. இதேவேளை, இந்த அறிக்கையின் பிரகாரம் நீதிமன்ற நடவடிக்கைக்குச் செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. 

அறிக்கையின் மூன்றாவது பக்கத்தில் தடயவியல் அறிக்கையின் காரணிகளை வழக்குத் தொடுப்பதற்கு பயன்படுத்த முடியாதெனக் கூறப்பட்டுள்ளது. மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் ஒருவர் இந்த தடயவியல் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதெனக் கூறியுள்ளார் என்றார். 

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment