கொரோனாவால் 75 ஆயித்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு - உயிரிழந்தவர்களின் தொகை 2,128 - ஈரானில் பதிவான இரு உயிரிழப்பு சம்பவங்கள்! - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 19, 2020

கொரோனாவால் 75 ஆயித்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு - உயிரிழந்தவர்களின் தொகை 2,128 - ஈரானில் பதிவான இரு உயிரிழப்பு சம்பவங்கள்!

கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது இன்றைய தினம் 75,727 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் தொகையும் 2,128 ஆக பதிவாகியுள்ளது. 

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 16,433 பேர் குணமடைந்துள்ளதுடன், 12,063 பேர் ஆபத்தான நிலையிலும் உள்ளனர். 

சீனாவின் பிரதான நிலப்பரப்புகளிலும் 394 கொரோனா தொடர்பான புதிய வழக்குகள் நேற்யை தினம் மாத்திரம் பதிவாகியுள்ளதாக சீனாவின் சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது. 

அந்த புதிய வழக்குகளில் 45 மட்டுமே ஹூபேக்கு வெளியே இருந்ததாகவும் சுகாதார ஆணையகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன. 

இதேவேளை தென்கொரியாவில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 82 ஆக உயர்வடைந்துள்ளது. ஒரே இரவில் மாத்திரம் 31 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் இன்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இதேவேளை ஈரானின் தெஹ்ரானுக்கு தெற்கே உள்ள கோம் நகரில் கொரோனா வைரஸ் காரணமாக இரண்டு முதியவர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரானின் சுகாதார அமைச்சரின் ஆலோசகரான அலிரெஸா வஹாப்சாதே உறுதிப்படுத்தியுள்ளார். 

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த உயிரிழப்புகளானது மத்திய கிழக்கில் ஏற்பட்ட முதல் கொரோனா உயிரிழப்பு சம்பவங்கள் ஆகும். 

சீனாவின் வுஹான் நகரில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸானது தற்போது மொத்தமாக 30 நாடுகளில் பரவியுள்ளது. 

1. சீனா: பாதிப்பு - 74, உயிரிழப்பு - 2,118 
2. ஜப்பான்: பாதிப்பு - 85 + 621 (டயமண்ட் பிரின்சஸ்), உயிரிழப்பு - 03 
3. சிங்கப்பூர்: பாதிப்பு - 84 
4. தென்கொரியா: பாதிப்பு - 82 
5. ஹொங்கொங்: பாதிப்பு - 65, உயிரிழப்பு - 02 
6. தாய்லாந்து: பாதிப்பு - 35 
7. தாய்வான்: பாதிப்பு - 24 
8. மலேசியா: பாதிப்பு - 22 
9. ஜேர்மன்: பாதிப்பு - 16 
10. வியட்நாம்: பாதிப்பு - 16 
11. அவுஸ்திரேலியா: பாதிப்பு - 15 
12. அமெரிக்கா: பாதிப்பு - 15 
13. பிரான்ஸ்: பாதிப்பு - 12, உயிரிழப்பு - 01 
14. மாக்கோ: பாதிப்பு - 10 
15. டுபாய்: பாதிப்பு - 09 
16. கனடா: பாதிப்பு - 08 
17. பிலிப்பைன்ஸ்: பாதிப்பு - 03, உயிரிழப்பு - 01 
18. இந்தியா: பாதிப்பு - 03 
19. இத்தாலி: பாதிப்பு - 03 
20. ஈரான்: பாதிப்பு - 02 
21. ரஷ்யா: பாதிப்பு - 02 
22. ஸ்பெய்ன்: பாதிப்பு - 02 
23. பெல்ஜியம்: பாதிப்பு - 01 
24. கம்போடியா: பாதிப்பு - 01 
25. எகிப்த்: பாதிப்பு - 01 
26. பின்லாந்து: பாதிப்பு - 01 
27. நேபாள்: பாதிப்பு - 01 
28. இலங்கை: பாதிப்பு - 01 
29. சுவீடன்: பாதிப்பு - 01 
30. தாய்வான்: பாதிப்பு - 24, உயிரிழப்பு - 01 

No comments:

Post a Comment