இந்தியாவில் இராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகள் ஆண் அதிகாரிகளுக்கு இணையாக உத்தரவுகளை பிறப்பிக்கும் உயர் அதிகாரியாக பணியாற்ற அனுமதியளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இராணுவ நியமனத்தில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாக மூத்த வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்து உயர் பதவியில் பெண்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், தேசிய பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு செயல்திறன் போன்ற கொள்கைகளை உருவாக்கும் போது அனைத்து அம்சங்களை கருத்தில் கொள்ளப்படும். பெண்களை உயர் அதிகாரிகளாக அனுமதிப்பது கடினம் என அரசு தரப்பு கூறுகிறது. காலங்கள் மாறிவரும் சூழலில் ஆண்களின் மனநிலையில் மாற்றம் தேவை. இராணுவத்தில் சேவை செய்ய பெண்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். பாலின பாகுபாட்டை களைய அரசு, இரண்டு விஷயங்களை செய்ய வேண்டும். ஒன்று அரசு உறுதியான முடிவை எடுக்க வேண்டும். மற்றொன்று மக்களின் மனநிலை மாற வேண்டும் என்று கூறி இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்றைய தினம் இந்திய உச்ச நீதிமன்றத்தில் எடுத்துகொள்ளப்பட்ட போது தீப்பளிக்கப்பட்டது.
இதன்படி பெண்கள் குறித்த மன நிலை மாற வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றம், பெண்களின் உடலியல் அம்சங்களுக்கு அவர்களின் உரிமைகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் பெண்களை இராணுவத்தின் உயர் பதவியில் நியமிக்கலாம் என்றும் அனுமதி அளித்து உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment