ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கல்கிசை நீதவான் மொஹமட் மிஹாயில் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களில் இரண்டாவது சந்தேகநபரான திஸ்ஸ சுகதபால வேறொரு வழக்கில் ஆஜரானதால் இன்று வழக்கு விசாரணையில் அவரால் ஆஜராக முடியவில்லை என அவர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி அறிவித்துள்ளார்.
இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான கொழும்பு தெற்கு பிராந்தியத்திற்கு பொறுப்பாக இருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்காரவிற்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடையை நீதிமன்றம் இன்று நீக்கியது.
லசந்த விக்ரமதுங்கவின் சாரதி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அதற்கான கடிதம் சட்ட மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று மன்றுக்கு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment