அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரி கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் மன்னாரில் இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையிலும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கையெழுத்து சேகரிக்கும் நோக்குடன் இன்று வியாழக்கிழமை (13) மாலை நடைபெற்றது.
மன்னார் புதிய பேருந்து நிலையத்துக்கு முன்பாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரணையில் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் இடம் பெற்றது.
குறித்த போராட்டத்தில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்க அதிகாரிகள் மன்னார் வளர் பிறை பெண்கள் அமைப்பினர் நேசக்கரம் பிரஜைகள் குழு அங்கத்தவர்கள் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த போராட்டத்தின் போது பெறப்பட்ட கையெழுத்துகள் நாடளாவிய ரீதியில் 15 மாவட்டங்களில் சேகரிக்கப்பட்டு 50 ஆயிரம் கையெழுத்துப் பிரதிகள் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள தேசிய மகளிர் தின நிகழ்வின் போது ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment