பல்வேறு அரசாங்கங்களுடனான வேண்டுகோளுக்குப் பிறகு, வெஸ்டர்டாம் என்ற பயணக் கப்பல் இறுதியாக கம்போடியாவின் சிஹானுவில்லேவில் உள்ள ஒரு துறைமுத்துக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல துறைமுகங்களிலும் அனுமதி மறுக்கப்பட்டு இரு வாரங்களாக கடலில் தத்தளித்து வந்த சொகுசு கப்பலுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல துறைமுகங்களிலும் அனுமதி மறுக்கப்பட்டு இரு வாரங்களாக கடலில் தத்தளித்து வந்த சொகுசு கப்பலுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
எம்.எஸ் வெஸ்டர்டாம் என்ற அந்தக் கப்பல் ஆசியாவில் ஐந்து இடங்களில் திருப்பி அனுப்பப்பட்டது. தாய்லாந்து, தைவான், குவாம், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணித்த போதும் அங்கு கப்பலை நிறுத்துவதற்கான அனுமதியானது மறுக்கப்பட்டது.
ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மற்றொரு சொகுசுக் கப்பலில் 200க்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டபோதும் இந்தக் கப்பலில் இருக்கும் 2000க்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

கொரோனா வைரஸ் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் கப்பலில் இல்லாவிட்டாலும் ஏனைய கப்பல்களில கொரோனா தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளமையினால் அச்சம் காரணமாக இவ்வாறு கப்பலை மேற்படி நாடுகளில் நங்கூரமிட அனுமதி மறுக்கப்பட்டது.
இதன் பின்னர் இந்த சொகுசுக் கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை பாங்கொக்கில் கரைசேர முயன்றபோது அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. தாய்லாந்து கடற்படைக் கப்பல் ஒன்று அந்தக் கப்பலை தாய்லாந்து குடாவில் இருந்து வெளியேற்றியது.
இதனைத் தொடர்ந்தே அது கம்போடியாவை நோக்கி பயணித்தது. இந்நிலையில் இன்று இந்தக் கப்பல் துறைமுக நகரான சிஹானுவில்லேவில் நங்கூரமிட்டுள்ளது.
துறைமுகத்தில் இறங்குவதற்கு முன், கப்பலின் பயணிகளை கம்போடியச் சுகாதார அதிகாரிகள் தீவிரமாகப் பரிசோதித்தனர். பயணிகளுக்கு வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.
வெஸ்டர்டாம் பயணிக் கப்பலில் 802 பணியாளர்கள் உட்பட மொத்தமாக 2000 க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
அமெரக்கர்கள் : 650
கனடா : 271
பிரிட்டன் : 127
நெதர்லாந்து : 91
அவுஸ்திரேலியா : 79
ஜேர்மன் : 57
சீனா மற்றும் ஹொங்கொங் : 30
ஏனைய நாடுகள் : 30
No comments:
Post a Comment