ரிப்கான் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டார் - வெளிநாடு செல்லத் தடை - News View

About Us

About Us

Breaking

Monday, February 17, 2020

ரிப்கான் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டார் - வெளிநாடு செல்லத் தடை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினின் சகோதரர் ரிப்கான் பதியூதினை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், அவருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரை, 25 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும், 5 இலட்சம் ரூபா பெறுமதியான தலா 2 சரீரப்பிணைகளிலும் விடுவிப்பதற்கு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.

பிணையாளர் ஒருவர் நெருங்கிய உறவினராக இருத்தல் வேண்டும் என உத்தரவிட்ட பிரதம நீதவான், சந்தேகநபருக்கு வௌிநாடு செல்வதற்கும் தடை விதித்துள்ளார்.

வாரந்தம், ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் எனவும், சந்தேகநபருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிணை வழங்கப்பட்டதை அடுத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின் சகோதரர் ரிப்கான் பதியூதின் கடந்த மாதம் 22ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

தலைமன்னார் பிரதேசத்திலுள்ள ரூபா. 240 இலட்சம் பெறுமதியான காணியை, போலி காணி உறுதி தயாரித்து விற்றதாக தெரிவிக்கப்படும் 2016ஆம் ஆண்டு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, ரிப்கான் பதியுதீன் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த போது, அவர் விசாரணைக்கு வருகை தராமை காரணமாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு தொடர்பில் ரிப்கான் பதியுதீனுக்கு இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment