ஜனாதிபதியின் சீன விஜயம் கேள்விக்குறியாகியுள்ளது - News View

About Us

About Us

Breaking

Sunday, February 2, 2020

ஜனாதிபதியின் சீன விஜயம் கேள்விக்குறியாகியுள்ளது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சீனாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் கேள்விக்குறியாகியுள்ளது. ஜனாதிபதி இம்மாதம் இரண்டாவது வாரத்தில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், சீனாவை தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அந்நாட்டிற்கான உத்தியோகபூர்வ விஜயம் கேள்விக்குறியாகியுள்ளது.

சீனாவிற்கான ஜனாதிபதியின் விஜயமானது நெருக்கடியான நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் பெரும்பாலும் ஒத்திவைக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக ஜனாதிபதி ஊடக பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.

அவ்வாறு இந்த விஜயம் ஒத்திவைக்கப்படும் பட்சத்தில், இது இரண்டாவது தடவையாக இடம்பெற்றுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment