பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மொஹமட் ஹபீஸ் பந்து வீச விதிக்கப்பட்ட த​டை நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 13, 2020

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மொஹமட் ஹபீஸ் பந்து வீச விதிக்கப்பட்ட த​டை நீக்கம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான மொஹமட் ஹபீஸ் மீண்டும் சர்வதேச போட்டிகளில் பந்து வீசும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். பந்து வீச அவருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

மொஹமட் ஹபீஸ் பந்தை வீசி எறிகிறார் எனும் சந்தேகத்தை கடந்த வருடத்தில் நடுவர்கள் வெளிப்படுத்தினர். அவர் பந்து வீசும் போது மணிக்கட்டு 15 பாகைக்கு மேல் வளைவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

எவ்வாறாயினும், இது தொடர்பாக இங்கிலாந்தின் லோபோரோ பல்கலைக்கழகம் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன், இதன்போது ஹபீஸின் பந்து வீச்சு பாணியில் தவறில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மொஹமட் ஹபீஸ் பந்து வீச விதிக்கப்பட்ட த​டையை நீக்குவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. கடந்த 6 வருடங்களில் பல தடவைகள் மொஹமட் ஹபீஸின் பந்து வீச்சு பாணி குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment