இணையத்தள நிதி மோசடி பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தல் - தகவல் தொழில்நுட்ப சங்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 15, 2020

இணையத்தள நிதி மோசடி பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தல் - தகவல் தொழில்நுட்ப சங்கம்

பொதுமக்கள் விழப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சங்கம், இணையத்தள நிதி மோசடிகளினால் ஏமாந்து விடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது. 

சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளமூடாக பல நிதி மோசடிச் சம்பவங்கள் பாதிவாகியுள்ளதாக இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் ராஜீவ் யாசிரு குருவிடேஜ் குறிப்பிட்டுள்ளார். 

இணையத்தளமூடான வர்த்தக செயற்பாடுகள் தொடர்பான போர்வையில் இத்தகைய மோசடிக்காரர்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது. 

ஒரு சேவையை வழங்குவதற்கு முன்னர் தமது வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிடுமாறு மோசடிக்காரர்கள் வலியுறுத்தி இது போன்ற நிதி மோசடிச் செயலில் அவர்கள் ஈடுபடுவதாகவும் குருவிடேஜ் சுட்டிக்காட்டியுள்ளார். 

எனவே இவ்வாறான இணையத்தள நிதி மோசடிகளினால் பொதுமக்கள் ஏமாந்து விடக்கூடாது என இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சங்கம் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment