இராணுவத் தளபதி, அவரது குடும்பத்தினர் அமெரிக்கா செல்லத் தடை - இலங்கை அரசாங்கம் கடும் ஆட்சேபனை - News View

About Us

About Us

Breaking

Friday, February 14, 2020

இராணுவத் தளபதி, அவரது குடும்பத்தினர் அமெரிக்கா செல்லத் தடை - இலங்கை அரசாங்கம் கடும் ஆட்சேபனை

அமெரிக்கா இராணுத் வதளபதி சவேந்திர சில்வாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக விதித்துள்ள பயண தடைகளிற்கு கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இந்த தடை சுயாதீனமான ஆராயப்படாத தகவல்களை அடிப்படையாக கொண்டது என தெரிவித்துள்ளது. 

இலங்கை இராணுவத்தில் அவரது சிரேஸ்ட நிலையை கருத்தில் கொண்டே சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அவரிற்கு எதிராக நிருபிக்கப்பட்ட வலுவான ஆதாரங்கள் எதுவுமில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இலங்கை இராணுவத்தில் உள்ளவர்களில் சிரேஸ்ட நிலையில் உள்ளதாலேயே சவேந்திர சில்வாவிற்கு தற்போதைய ஜனாதிபதி இராணுவ பிரதானி பதவியை வழங்கினார் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இலங்கையின் இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டு ஆறு மாதங்களிற்கு பின்னர் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளமை கரிசனை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான முக்கிய பதவிகளிற்கு நிருபிக்கப்பட்ட அனுபவமுள்ள ஒருவரை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நியமிப்பதை வெளிநாட்டு அரசாங்கமொன்று கேள்வி கேட்பது ஏமாற்றமளிக்கின்றது எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

சவேந்திர சில்வா குறித்த தகவல்களின் நம்பகத் தன்மையை ஆராய்ந்து தனது முடிவை அமெரிக்கா மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொள்கின்றது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment