இலங்கை வரலாற்றில் முதல் தடவை ! சுதந்திர தினத்தில் இராணுவ பதக்கங்களுடன் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 4, 2020

இலங்கை வரலாற்றில் முதல் தடவை ! சுதந்திர தினத்தில் இராணுவ பதக்கங்களுடன் ஜனாதிபதி

(ஆர்.யசி) 

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அணிந்திருந்த ஆடையில் இராணுவ பதக்கங்கள் பதிக்கப்பட்டிருந்தது. 

இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் இராணுவ பதக்கங்களை அணிந்திருந்த முதல் சம்பவம் இதுவாகும். 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினம் இன்று சுதந்திர சந்துக்கத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் ஜனாதிபதி வருகை தந்த வேளையில் அவர் அணிந்திருந்த வெள்ளை நிற ஆடையில் இராணுவ பதக்கங்கள் பதிக்கப்பட்டிருந்தது. 

இந்த பதக்கங்கள் ஜனாதிபதி இராணுவத்தில் சேவையாற்றிய காலத்தில் அவர் பெற்ற பதக்கங்கள் என கூறப்படுகின்றது. 

குறிப்பாக அவரது இராணுவ சேவைக் காலத்தில் ரண விக்கிரம மற்றும் ரண சூர பதக்கங்கள் அவர் பெற்றுக் கொண்டுள்ளார். 

இந்நிலையில் அந்த பதக்கங்களுடன் அவர் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டார். 

இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் இராணுவ பதக்கங்களுடன் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பதும் குடிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment