தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடுவது தொடர்பில் கடைசி தருணத்திலாவது நல்ல முடிவை எடுங்கள் - கோட்டாவுக்கு மனோ பகிரங்க கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, February 2, 2020

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடுவது தொடர்பில் கடைசி தருணத்திலாவது நல்ல முடிவை எடுங்கள் - கோட்டாவுக்கு மனோ பகிரங்க கோரிக்கை

முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், இந்த கடைசி தருணத்திலாவது நல்ல முடிவை நீங்கள் எடுக்க வேண்டும் என கோர விரும்புகிறேன். 

சுதந்திர தின வைபவத்தில் தமிழ் மொழியில் இலங்கை தேசிய கீதம் பாடப்படும் கடந்த நான்கு வருட நடைமுறையை உங்கள் நிர்வாகம், மாற்றி விடக்கூடாது என நான் விரும்புகிறேன். 

தமிழ் மொழியில் பாடப்படும் தேசிய கீதம் என்பது இன்னொரு வழமையான பாடல் அல்ல. அது தமிழ் பேசும் இலங்கையர்களின் “இலங்கையர் அடையாளம்”. 

இதுதான் இன்றைய கால கட்டத்தின் தேவை, என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பீயுமான மனோ கணேசன் தனது டுவீடர் தளத்தின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த டுவீடர் செய்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் டுவீடர் தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment