70 ஆயிரத்தையும் கடந்துள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தொகை - உயிரிழப்பு - 1,775! - News View

About Us

About Us

Breaking

Monday, February 17, 2020

70 ஆயிரத்தையும் கடந்துள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தொகை - உயிரிழப்பு - 1,775!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 71,334 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் தொகையும் 1,775 ஆக பதிவாகியுள்ளது. 

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களின் 11,298 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதுடன், 11,029 பேர் குணமடைந்தும் உள்ளனர். 

கொரோனா வைரஸின் மையமான ஹூபே மாகாணத்தில் நேற்றைய தினம் 1,933 கொரோனா தொடர்பான புதிய வழக்குகளும், 100 உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளது. 

கொரோனா தொற்றுக்குள்ளாகி சீனாவில் மொத்தமாக 1770 பேர் உயிரிழந்துள்ளதுடன், தாய்வான், பிரான்ஸ், ஹொங்கொங், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானில் தலா ஒவ்வொரு பேர் அடங்கலாக சீனாவுக்கு வெளியே மொத்தம் 5 உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளது. 

சீனாவின் வுஹானில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸானது தற்போது 29 நாடுகளில் பரவியுள்ளது. 

1. சீனா : பாதிப்பு - 70,550, உயிரிழப்பு - 1,770 
2. ஜப்பான் : பாதிப்பு - 416, உயிரிழப்பு - 01 
3. சிங்கப்பூர் : பாதிப்பு - 75 
4. ஹொங்கொங் : பாதிப்பு - 57, உயிரிழப்பு - 01 
5. தாய்லாந்து : பாதிப்பு - 34, உயிரிழப்பு - 01 
6. தென்கொரியா : பாதிப்பு - 30 
7. மலேசியா : பாதிப்பு - 22 
8. தாய்வான் : பாதிப்பு - 20, உயிரிழப்பு - 01 
9. ஜேர்மன் : பாதிப்பு - 16 
10. வியட்நாம் : பாதிப்பு - 16 
11. அமெரிக்கா : பாதிப்பு - 15 
12. அவுஸ்திரேலியா : பாதிப்பு - 15 
13. பிரான்ஸ் : பாதிப்பு - 12, உயிரிழப்பு - 01 
14. மாக்கோ : பாதிப்பு - 10 
15. டுபாய் : பாதிப்பு - 09 
16. பிரிட்டன் : பாதிப்பு - 09 
17. கனடா : பாதிப்பு - 08 
18. பிலிப்பைன்ஸ் : பாதிப்பு - 03 
19. இந்தியா : பாதிப்பு - 03 
20. இத்தாலி : பாதிப்பு - 03 
21. ரஷ்யா : பாதிப்பு - 02 
22. ஸ்பெய்ன் : பாதிப்பு - 02 
23. இலங்கை : பாதிப்பு - 01 
24. பின்லாந்து : பாதிப்பு - 01 
25. எகிப்த் : பாதிப்பு - 01 
26. கம்போடியா : பாதிப்பு - 01 
27. சுவீடன் : பாதிப்பு - 01 
28. நேபாள் : பாதிப்பு - 01 
29. பெல்ஜியம் : பாதிப்பு - 01 

No comments:

Post a Comment