களவாடப்பட்ட 450,000 பெறுமதியான பணம், 20 பவுண் நகைகளுடன் ஐவர் கைது - News View

Breaking

Post Top Ad

Monday, February 17, 2020

களவாடப்பட்ட 450,000 பெறுமதியான பணம், 20 பவுண் நகைகளுடன் ஐவர் கைது

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் கொள்ளையிடப்பட்ட 20 பவுண் நகை மற்றும் பணத்துடன் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அரியாலையில் உள்ள வீடு ஒன்று யாழ்ப்பாண பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் முன்னெடுக்கப்பட்ட போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூபா 450,000 பெறுமதியான களவாடப்பட்ட பணம் 20 பவுண் களவாடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டன.

வீட்டில் தங்கியிருந்த அரியாலை சேர்ந்த சந்தேகத்துக்கிடமான 5 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 

கடந்த காலங்களில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல்வேறுபட்ட இடங்களில் வழிப்பறி மற்றும் நகைத் திருட்டுக்கள் இடம்பெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாண பொலிஸாரினால் குறித்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் 5 பேரும் 20 தொடக்கம் 25 வயது உடையவர்கள் எனவும் சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

(யாழ்ப்பாணம் நிருபர் - சுமித்தி தங்கராசா)

No comments:

Post a Comment

Post Bottom Ad