நாடளாவிய ரீதியில் 40,000 போலி வைத்தியர்கள் - தகவல் சேகரிக்கும் நிலையத்தை ஆரம்பிக்க நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2020

நாடளாவிய ரீதியில் 40,000 போலி வைத்தியர்கள் - தகவல் சேகரிக்கும் நிலையத்தை ஆரம்பிக்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் 40,000 போலி வைத்தியர்கள் உள்ளதாகவும், குறித்த வைத்தியர்களுக்கு எதிராக முறைப்பாடு மற்றும் தகவல் சேகரிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய குறித்த நிலையத்தின் தொலைபேசி இலக்கத்தை எதிர்வரும் வாரமளவில் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர், வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒருசில வருடங்களுக்கு முன்னர் வெளியான தகவல்களுக்கு அமைய நாடு முழுவதும் போலி வைத்தியர்கள் சுமார் 40,000 பேர் உள்ளதாகவும், இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக தமது சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment