367 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீடு அடுத்த வாரம் சபையில் சமர்ப்பிப்பு - அமைச்சர் பந்துல - News View

About Us

About Us

Breaking

Thursday, February 13, 2020

367 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீடு அடுத்த வாரம் சபையில் சமர்ப்பிப்பு - அமைச்சர் பந்துல

பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் குறைநிரப்பு மதிப்பீடொன்றை சமர்ப்பிக்க இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

கடந்த அரசில் முன்னெடுத்த திட்டங்களுக்காக செலுத்த வேண்டிய 367 பில்லியன் ரூபாவை செலுத்தும் வகையில் இந்த மதிப்பீடு சமர்ப்பிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இது தொடர்பாக மேலும் கூறுகையில், குறைநிரப்பு மதிப்பீடொன்றை சமர்ப்பிக்க ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைத்து. 

சட்டமூலம் சட்டவரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பி தயார் செய்யப்பட்டுள்ளதோடு இதற்கு சட்ட மா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது. 

கடந்த அரசாங்கம் கம்பெரலிய, கமநெகும, அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம், நெடுஞ்சாலை திட்டம், போன்ற திட்டங்களை செயற்படுத்தியது. ஆனால் 2019 இறுதியில் அதற்கு நிதி வழங்கப்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஒப்பந்தக்காரர்களுக்கு நிதி வழங்கும் நோக்கில் குறைநிரப்பு மதிப்பீடொன்றை சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிரணி ஆதரவு வழங்குமென எதிர்பார்க்கிறோம். 

இதற்கான நிதி செலுத்துவது எமது பொறுப்பல்ல இருந்தாலும் ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் வழங்குவதற்கான பிரேரணையை சமர்ப்பிக்க இருக்கிறோம்.

இதற்கு பாராளுமன்ற அனுமதி கிடைத்ததும் ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைகளை வழங்க முடியும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment