கொரோனா வைரஸ் தாக்கம் - ஹொங்கொங்கில் பதிவான முதல் உயிரிழப்பு, 20,629 பேர் பாதிப்பு, 427 பேர் உயிரிழப்பு! - News View

About Us

About Us

Breaking

Monday, February 3, 2020

கொரோனா வைரஸ் தாக்கம் - ஹொங்கொங்கில் பதிவான முதல் உயிரிழப்பு, 20,629 பேர் பாதிப்பு, 427 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக உலகளாவிய ரீதியில் பாதுப்படைந்தோர் தொகை 20 ஆயிரத்தை கடந்துள்ளதுடன் உயிரிழந்தோர் தொகை 427 ஆக அதிகரித்துள்ளது. 

அதன்படி கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 27 நாடுகள் சேர்ந்த 20,629 பேர் பாதிப்படைந்துள்ளனர். 

1. சீனா : பாதிப்பு - 20,438, உயிரிழப்பு - 425 
2. ஜப்பான் : பாதிப்பு - 20 
3. தாய்லாந்து : பாதிப்பு - 19 
4. சிங்கப்பூர் : பாதிப்பு - 18 
5. வடகொரியா : பாதிப்பு - 16 
6. ஹொங்கொங் : பாதிப்பு - 15, உயிரிழப்பு - 01 
7. ஜேர்மனி : பாதிப்பு - 12 
8. அவுஸ்திரேலியா : பாதிப்பு - 12 
9. அமெரிக்கா : பாதிப்பு - 12 
10. தாய்வான் : பாதிப்பு - 10 
11. மாக்கோ : பாதிப்பு - 09 
12. வியட்நாம் : பாதிப்பு - 09 
13. மலேசியா : பாதிப்பு - 08 
14. பிரான்ஸ் : பாதிப்பு - 06 
15. டுபாய் : பாதிப்பு - 05 
16. கனடா : பாதிப்பு - 04 
17. இந்தியா : பாதிப்பு - 03 
18. பிலிப்பைன்ஸ் : பாதிப்பு - 02, உயிரிழப்பு -01 
19. பிரிட்டன் : பாதிப்பு - 02 
20. ரஷ்யா : பாதிப்பு - 02 
21. இத்தாலி : பாதிப்பு - 02 
22. சுவீடன் : பாதிப்பு - 01 
23. கம்போடியா : பாதிப்பு - 01 
24. பின்லாந்து : பாதிப்பு - 01 
25. இலங்கை : பாதிப்பு - 01 
26. நேபாள் : பாதிப்பு - 01 
27. ஸ்பெய்ன் : பாதிப்பு - 01 

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஹொங்கொங்கில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது சீனாவுக்கு வெளியில் இடம்பெறும் இரண்டாவது கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட உயிரிழப்பாகும். 

இதற்கு முன்னர் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒருவர் உயிரிழந்தாக பதிவாகியது. 39 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரிற்கும் ஹுனான் நகரித்தின் சாங்ஷா நகரிற்கும் முன்னதாகவே சென்று ஹொங்கொங் திரும்பியதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை ஹொங்கொங்கில் சீனாவுடனான எல்லையை முற்றாக மூடுமாறு வலியுறுத்தி 13,000 க்கும் மேற்பட்ட மருத்துவ தொழிலாளர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment