1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து விடுதலையடைந்து தனி சுதந்திர நாடானதைக் குறிக்கும் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றது. இது எமது விடுதலை உணர்வை கூர்மைப்படுத்தும் ஒரு நாளாகும்.
இந்நாளில் நாடு முழுவதும் தேசிய கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடும் இத்தருணத்தில் எமது தேசத்தின் விடுதலைக்காக போராடி மறைந்த எமது தலைவர்களை ஞாபகப்படுத்துவதோடு, நம் நாட்டிற்கும் புகழ் சேர்த்திடும் அதன் அமைவிடம், அதன் புகழ்மிக்க வரலாறு, அதற்கு புகழ் சேர்த்திடும் பன்மைத்துவம், பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் என்பவற்றை காத்து போற்றுவோம்.
இந்தப் பெருமைக்குரிய நாளில் அனைத்து வகையான அடிமைத்தனங்களுக்கும் பின்னடைவுகளுக்கும் விடைகொடுத்து பரிபூரண சுதந்திரத்தை கருத்தாகவும், நாம் காணும் காட்சியாகவும் அனைத்து நிலைகளிலும் அமைத்து எல்லோரும் எல்லாம் பெற்றிட எமது தேசம் உலக அரங்கில் உயர்ந்திட, எமது தேசத்தின் உண்மையான பாதுகாப்புக்காகவும், அதன் சுபீட்சத்திற்காகவும் உழைக்கின்ற அனைவருடனும் கைக்கோர்த்து பணிபுரிய உறுதி பூணுவோம்.
இந்நந்நாளை நமது நண்பர்கள், உறவினர்கள், இலங்கையர்கள் அனைவருடனும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டாடுவோம்.
அஷ்ஷெய்க். எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி
தலைவர்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
No comments:
Post a Comment