ஜெனீவாவில் 2001 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் கடந்த அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை இலங்கை மீளப்பெறுமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
கடந்த அரசாங்கம் அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் அனுமதியின்றியே மேற்படி பிரேரணைகளை ஜெனீவாவுக்கு சமர்ப்பித்திருப்பதாகவும் இவ்விடயத்தில் முன்னாள் அரசாங்கம் பாராளுமன்றத்தை கருத்திற்கொள்ளாமலேயே இவ்விடயங்களை முன்னெடுத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் இதுபோன்ற குறுகிய நோக்கமுடைய செயற்பாடுகளின் காரணமாகவே எமது இராணுவ வீரர்கள் மீது அடிப்படையற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதற்கு காரணமாகியுள்ளன என்றும் அவர் கூறினார்.
மேலும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளின் கூட்டணி தொடர்பில் இங்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, இது இலங்கை அரசியலில் உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய மற்றும் பலம் வாய்ந்ததொரு கூட்டணியென அமைச்சர் விளக்கமளித்தார்.
No comments:
Post a Comment