மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்திலுள்ள ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய அதிபரான ஏ.எல். அபுல் ஹஸன் இலங்கை அதிபர் சேவையின் தரம் - I இற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்.
பொதுச்சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவை குழுவினால் 04.12.2015 ஆம் திகதி தொடக்கம் அமுலாகும் வண்ணம் இலங்கை அதிபர் சேவையின் தரம் - I இற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்.
இவர் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவுடன் கூடிய கலைப்பட்டதாரி ஆவார்.
இதற்கு முன்னர் மட்/மம/றிதிதென்ன இக்ரா வித்தியாலயம் மற்றும் மட்/மம/மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராகவும், ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் நீண்ட காலம் பிரதி அதிபராகவும் சேவையாற்றி தற்போது மட்/மம/ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் தரம் - ii அதிபராக கடமையாற்றுகிறார்.
நாளை 02.01.2020 தொடக்கம் தரம் - i (SLPS - i) அதிபராக இவர் கடமையேற்கவுள்ளார்.
இவரது சேவை இன்னும் பல காலம் தொடர இவருக்காக பிரார்த்திப்பதுடன், இவரை வாழ்த்துவதிலும் மகிழ்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.
எஸ். ஜவாஹிர் சாலி,
முன்னாள் வலயக் கல்வி பிரதிப் பணிப்பாளர்,
கிழக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர்.
No comments:
Post a Comment