தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த ராஜித சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 1, 2020

தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த ராஜித சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்

(எம்.எப்.எம்.பஸீர்)

சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் சந்திப்பில் வெள்ளை வேன் கடத்தல், கொலை, தங்கக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் வெளிப்படுத்திய விவகாரத்தில் இடம்பெறும் விசாரணைகளில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

ராஜித சேனாரத்ன இருதய சிகிச்சைகளுக்காக நாரஹேன்பிட்டியில் உள்ள லங்கா தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று நண்பகல் இவ்வாறு சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment