கிளிநொச்சி, கனகபுரம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று (01) அதிகாலை 4.00 மணியளவில் தம்புள்ளையிலிருந்து மரக்கறிகளை ஏற்றிய லொறி ஒன்று கிளிநொச்சி கனகபுரம் பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறியை விநியோகித்து விட்டு திரும்பி வருகின்ற வேளையில் எதிர்த் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் குறித்த பாரஊர்தியுடன் மோதியதில் இரு இளைஞர்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்த 23 வயதுடைய வரதராஜா ஜெமினன் மற்றும் யாழ்ப்பாணம் செட்டியார் மடம் அராலி மேற்கைச்சேர்ந்த 29 வயதுடைய செல்வநாயகம் அஜிந்தன் ஆகிய இருவருமே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(கிளிநொச்சி நிருபர் - எம். தமிழ்ச்செல்வன்)
No comments:
Post a Comment