2018ஆம் 2019ஆம் ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட 19,394 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையினால் 600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
உச்சபட்சமாக ஏக்கருக்கு 40,000 ரூபா வரையில் இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்படுத்த முடியாதஇயற்கை பேரழிவுகளால் சேதமடைந்த நெல், சோளம், சோயா, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் மிளகாய் பயிர்களுக்கு இதன் கீழ் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியான அனைத்து விவசாயிகளும் நாளை (22) முதல் வங்கிகளிடமிருந்து இழப்பீடு பெறலாம்.
இந்த மாதம் 24ஆம் திகதிக்குள் இழப்பீடு பெறாத விவசாயிகள் மாவட்டத்தில் உள்ள கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் அலுவலகத்திற்கு முறையீடு செய்யலாம் எனவும் அச்சபை அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment